Breaking News

ஓவல் டெஸ்ட் : முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 290 ரன்கள் எடுத்து ஆல் அவுட் 

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து அணிக்கு எதிராக ஓவல் மைதானத்தில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடி வருகிறது. இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 290 ரன்கள் குவித்து ஆல் அவுட்டாகி உள்ளது. இதன் மூலம் ஆட்டத்தில் 99 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது அந்த அணி. 

இந்தியா முதல் இன்னிங்ஸில் 191 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி இருந்தது. இங்கிலாந்து அணிக்காக போப் 81 ரன்களும், வோக்ஸ் 50 ரன்களும் எடுத்தனர். 

image

இந்தியா சார்பில் உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுகளும், பும்ரா மற்றும் ஜடேஜா தலா 2 விக்கெட்டுகளும், தாக்கூர் மற்றும் சிராஜ் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தி இருந்தனர். 

இந்தியா இரண்டாவது இன்னிங்ஸை 99 ரன்கள் பின்தங்கிய நிலையில் தொடங்கி உள்ளது.

இதையும் படிக்கலாம் : 'கைகளை இழந்தாலும் நம்பிக்கையை இழக்கவில்லை' - 4 பதக்கங்களால் இதயங்களை கவர்ந்த சீன வீரர் 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3tdsIR7
via

No comments