ஆசிய கண்டத்தில் 150 மில்லியன் ஃபாலோயர்களை பெற்ற முதல் நபரானார் விராட் கோலி

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கிரிக்கெட் களத்தில் சாதனைகளை படைப்பதில் வல்லவர். அவர் களம் காண்கின்ற ஒவ்வொரு போட்டியும் சாதனைகளாக மாற்றுபவர் அவர். இந்நிலையில் ஆசிய கண்டத்தில் 150 மில்லியன் ஃபாலோயர்களை பெற்ற முதல் நபர் என்ற சாதனையை படைத்துள்ளார் கோலி.
அதோடு கிரிக்கெட் விளையாட்டில் அதிக இன்ஸ்டா ஃபாலோயர்களை பெற்றவரும் கோலி தான் என்ற மைல் கல்லையும் அவர் எட்டியுள்ளார். மேலும் உலக அளவில் 150 மில்லியனுக்கும் மேற்பட்ட ஃபாலோயர்களை கொண்டுள்ள நான்காவது விளையாட்டு வீரராகி உள்ளார்.
விரைவில் இந்த பட்டியலில் கோலி முதலிடத்தை பிடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. முதல் மூன்று இடத்தில் ரொனால்டோ, மெஸ்ஸி மற்றும் நெய்மர் உள்ளனர்.
இதையும் படிக்கலாம் : 'கைகளை இழந்தாலும் நம்பிக்கையை இழக்கவில்லை' - 4 பதக்கங்களால் இதயங்களை கவர்ந்த சீன வீரர்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3zMI6GA
via
No comments