உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்கும் நேரம் காலை 7 முதல் இரவு 7 வரை நீட்டிப்பு: மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் வாக்களிக்கும் நேரம் காலை 7 முதல் இரவு 7 மணி வரை நீட்டிக் கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட் டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தும்பணிகளை மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. ஏற்கெனவே வாக்குச்சாவடிகள் அமைத்தல் மற்றும் தேர்தல் நடத்தும் அதிகாரிகளை நியமித்தல் தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகள், வேட்பாளர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்த கையேடுகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3yE1a8Q
via
No comments