Breaking News

சாலையில் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த பெண் அடையாளம் தெரிந்தது: விபத்தை ஏற்படுத்திய கார் பறிமுதல்; உரிமையாளரிடம் விசாரணை

கோவையில் சாலையில் பெண் உடல் இழுத்துச் செல்லப்பட்ட விவகாரத்தில், உயிரிழந்த பெண் யார் என்ற அடையாளம் கண்டறியப்பட்டுள்ளது. தொடர்புடைய காரின் உரிமையாளரிடம் போலீஸார் விசாரித்துவருகின்றனர்.

கோவை - அவிநாசி தேசிய நெடுஞ்சாலையில், சின்னியம்பாளையம் அருகே கடந்த 6-ம் தேதி அதிகாலை பெண் ஒருவரின் உடல் சிதைந்த நிலையில் கிடந்தது. பீளமேடு போலீஸார் உடலை மீட்டு விசாரணை நடத்தினர். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, கார் ஒன்றில் சிக்கி அப்பெண் உடல் சிறிது தூரம் இழுத்து செல்லப்பட்டு, பிறகு சாலையில் விழுந்தது தெரிந்தது. அப்பெண் விபத்தில் சிக்கினாரா? அல்லது கொலை செய்யும் நோக்கில் யாரேனும் காரிலிருந்து தூக்கி வீசினார்களா? என்ற சந்தேகத்தின்பேரில் போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3z8Ef5H
via

No comments