பறக்கும் பால விபத்துக்கு பின் மதுரை-நத்தம் சாலையில் மீண்டும் பணி தொடக்கம்

மதுரை-நத்தம் சாலையில் பறக்கும் பாலத்துக்குக் கீழே சாலை அமைக்கும் பணி மட்டும் நேற்று தொடங்கியது.
மதுரை-நத்தம் இடையே 4 வழிச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மதுரை அவுட்போஸ்ட் முதல் செட்டிகுளம் வரை மேம் பாலம் அமைக்கப்படுகிறது. நாராயணபுரம் அருகே இணைப்புப் பாலத்தில் கர்டர்கள் பொருத்தும் பணி ஆக.28-ல் நடந்தது. அப்போது ஹைட்ராலிக் ஜாக்கியில் ஏற்பட்ட கோளாறால் ஒரு கர்டர் கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் சிக்கி வட மாநில தொழிலாளி ஒருவர் இறந்தார். ஒருவர் காயமடைந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3jF9G2X
via
No comments