Breaking News

ப்ளூ சட்டை மாறனின் 'ஆண்டி இந்தியன்' படத்திற்கு யு/ஏ சான்று

ஆண்டி இந்தியன் திரைப்படம் வெளியாகக் கூடாது என, தணிக்கை குழுவுக்கு பலரும் அழுத்தம் கொடுத்ததாக, அந்தப் படத்தின் இயக்குனரும் விமர்சகருமான ப்ளூ சட்டை மாறன் தெரிவித்துள்ளார்.
 
யூடியூப் வலைதளத்தில் பிரபல சினிமா விமர்சகராக வலம் வரும் ப்ளூ சட்டை மாறன், "ஆண்டி இந்தியன்" என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். அத்திரைப்படத்தில் சர்ச்சைக்குறிய காட்சிகள் இருப்பதாகக் கூறி, தணிக்கை குழுவினர் சான்றிதழ் வழங்க மறுத்ததால், நீதிமன்றத்திற்கு சென்றதாகவும், தன்னுடைய வழக்கை விசாரித்த நீதிபதிகள் தனிக்குழு அமைத்து படத்திற்கு சான்றிதழ் வழங்க உத்தரவிட்டனர் என்றும் மாறன் கூறினார். அதன் அடிப்படையிலேயே தற்போது எந்த காட்சிகளும் நீக்கப்படாமல் ஆண்டி இந்தியன் திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/2XS9Trk

No comments