Breaking News

கடற்கரை - செங்கல்பட்டு இடையே ரயில் சேவைகள் இன்று ரத்து

தாம்பரம் யார்டில் இன்று காலை 10 முதல் மதியம் 2 மணி வரை பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதன்படி, கும்மிடிப்பூண்டியில் இருந்து காலை 7.50 மணிக்கு செங்கல்பட்டுக்கு இயக்கப்படும் மின்சார ரயில் இன்று தாம்பரம், செங்கல்பட்டு இடையே ரத்து செய்யப்படுகிறது. சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டுக்கு காலை 9.32, 10.10, 10.56, 11.50 மற்றும் நண்பகல் 12.15 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள் தாம்பரம்-செங்கல்பட்டு இடையே ரத்து செய்யப்படுகின்றன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3zVHoqy
via

No comments