ரூ.234 கோடியில் பெருங்களத்தூர் ரயில்வே மேம்பாலப் பணி: தாம்பரம் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா ஆய்வு

தாம்பரம் அருகே பெருங்களத்தூரில் ரூ.234.37 கோடியில் ரயில்வே மேம்பால பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியை தாம்பரம் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா ஆய்வு மேற்கொண்டார்.
தாம்பரம் மற்றும் வண்டலூர் ரயில் நிலையங்களுக்கு இடையில் பெருங்களத்தூரில் ரயில்வே கேட் எண் 32-க்கு மாற்றாக ரூ.234 கோடியே 37 லட்சத்தில் ரயில்வே மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. முன்னதாக ரயில்வே துறை சார்பில் ரூ.76 கோடி மதிப்பீட்டில் பெருங்களத்தூர் பகுதியை ஜிஎஸ்டி சாலையுடன் இணைக்கும் வகையில் ரயில்வே மேம்பாலப் பணிகள் கடந்த 2015-ம் ஆண்டு தொடங்கின. அந்த பணிகள் முடிந்துவிட்டன. கடந்த ஆண்டு தமிழக நெடுஞ்சாலைத் துறை சார்பில் மேம்பாலப் பணிகள் தொடங்கப்பட்டன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3piP3Nf
via
No comments