Breaking News

ஒரே சீசனில் 32 விக்கெட் வீழ்த்திய ஹர்ஷல் - படிக்கல் கோட்டைவிட்ட கேட்ச்சால் தவறிப்போன சாதனை

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் பந்து வீச்சாளர் ஹர்ஷல் பட்டேல் நடப்பு ஐபிஎல் சீசனில் 32 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இதன் மூலம் ஒரே சீசனில் அதிக விக்கெட்டுகளை எடுத்த பவுலராக இருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆல்-ரவுண்டர் பிராவோவின் சாதனையை சமன் செய்துள்ளார். 

image

2012 முதல் ஐபிஎல் அரங்கில் விளையாடி வருகிறார் ஹர்ஷல். ஒன்பது ஐபிஎல் சீசன்களில் பந்து வீசி உள்ள ஹர்ஷல் மொத்தம் 63 போட்டிகளில் விளையாடி 78 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதில் 32 விக்கெட்டுகள் நடப்பு சீசனில் எடுத்தவை. 

image

சென்னை அணியின் பிராவோ 2013 சீசனில் 18 போட்டிகளில் விளையாடி 32 விக்கெட்டுகளை அள்ளி இருந்தார். ஆனால் ஹர்ஷல் பட்டேல் 15 போட்டிகளில் மட்டுமே விளையாடி 32 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். கொல்கத்தா அணிக்கு எதிரான எலிமினேட்டர் போட்டியில் ஹர்ஷல் பட்டேல் வீசிய ஆட்டத்தின் 17-வது ஓவரில் நரைன் கொடுத்த கேட்சை நழுவவிட்டார் படிக்கல். அதை அவர் பிடித்திருந்தால் ஒரே சீசனில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலர் என்ற சாதனையை படைத்திருப்பார் அவர். எப்படியும் அவர் இந்த சீசனில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலருக்கான Purple கேப்பை வெல்ல அதிக வாய்ப்பு உள்ளது. 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3FC4G8k
via

No comments