Breaking News

50 இடங்களில் நடைபெற்ற சோதனை நிறைவு: முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு தொடர்புடைய நபரின் அலுவலகத்துக்கு சீல்

முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தொடர்புடைய 50 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் நடத்திய சோதனை நிறைவடைந்துள்ளது. அவருக்குதொடர்பு உடையதாக கூறப்படும் நபரின் சென்னை அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டது.

கடந்த அதிமுக ஆட்சியில் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தவர் சி.விஜயபாஸ்கர். இவர் 2016 - 2021 காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக ரூ.27.23 கோடி சேர்த்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, விஜயபாஸ்கர், அவரது மனைவி ரம்யா மீது புதுக்கோட்டை ஊழல்தடுப்பு, கண்காணிப்பு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3G3nehV
via

No comments