நற்பணி மன்ற நிர்வாகிகளுடன் விரைவில் ஆலோசனை கூட்டம் - சிம்பு அறிக்கை
நற்பணி மன்றத்தின் பணிகளை விரிவுபடுத்த உள்ளதாக தெரிவித்துள்ளார் நடிகர் சிம்பு.
இது குறித்து சிம்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், “மதிப்பும் பேரன்புகொண்ட என் இரத்தத்தின் இரத்தமான, என் உறவுகளே வணக்கம், நீண்ட நாளாக இயற்கையின் செயல்களால், உங்களிடம் நேரடியாக உறவாடாமல், உங்களின் தொலைபேசி வாயிலாக உறவு கொண்டோம். மேலும் இளைஞர் அணி, வழக்கறிஞர் அணி, மருத்துவ அணி, தகவல் தொழில் நுட்ப பிரிவு அணி, கலை இலக்கிய அணியின் மூலம் மன்றத்தின் பணிகளை விரிவுபடுத்த உள்ளோம்.

ஆதலால் நம் நற்பணி மன்றத்தின் அகில இந்திய தலைவர் T.வாசு அவர்களின் தலைமையில் ஆலோசனை கூட்டம் சென்னையில் நடைபெறவுள்ளது. ஆகையால் மாநில, மாவட்ட, வட்ட, பொறுப்பாளர்கள், நமது தலைமை அலுவலகத்தை தொடர்பு கொண்டு கலந்து கொள்ள பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன். (தேதி பின்னர் அறிவிக்கப்படும்)” என குறிப்பிட்டுள்ளார்.
Press release : From the desk of #SilambarasanTR Announcement on Fans Welfare Association. @SilambarasanTR_ pic.twitter.com/wEjXoXYshi
— Hariharan Gajendran (@hariharannaidu) September 30, 2021
இதையும் படிக்க: ’மாநாடு’ டிரெய்லரை வெளியிடும் நான்கு மொழி திரை பிரபலங்கள்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3D4s50e
No comments