கடைசி ஓவர் வரை போராடி கொல்கத்தாவிடம் தோல்வி! மைதானத்திலேயே கண்ணீர் சிந்திய கோலி
நடப்பு ஐபிஎல் சீசனுடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை கேப்டனாக வழிநடத்தும் பொறுப்பிலிருந்து விலக உள்ளதாக அறிவித்திருந்தார் விராட் கோலி. அமீரகத்தில் நடைபெற்று வரும் பிற்பாதி ஐபிஎல் சீசன் தொடங்குவதற்கு முன்னதாக இந்த அறிவிப்பு அவரிடமிருந்து வந்திருந்தது.
எப்படியும் கோப்பையை இந்த முறை வென்று கொடுத்துவிட்டு அவர் கேப்டன் பொறுப்பில் இருந்து விடைபெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. அதை போலவே பெங்களூர் அணியின் செயல்பாடும் இருந்தது. புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடம் பிடித்து நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியது பெங்களூர். எலிமினேட்டரில் கொல்கத்தாவிடம் தோல்வியை தழுவி தொடரை விட்டு வெளியேறியுள்ளது.
எலிமினேட்டர் போட்டி முடிந்ததும் கோலி கண் கலங்கிய காட்சி தற்போது சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டு வருகிறது. அவருடன் டிவில்லியர்ஸும் கண் கலங்கியது கேமராவில் பதிவாகி உள்ளது.
“ஐபிஎல்-லில் நான் விளையாடினால் அது பெங்களூர் அணிக்காக மட்டும் தான் இருக்கும். இது என்றுமே மாறாது” என தோல்விக்கு பிறகு கோலி சொல்லி இருந்தார்.
139 ரன்கள் என்ற குறைவான இலக்கையே நிர்ணயித்தாலும் கடைசி வரை வெற்றிக்காக போராடினார் விராட் கோலி. அவர் நம்பிக்கையுடன் ஆட்டத்தை அணுகியதுதான் கடைசி ஓவர்வரை போட்டி சென்றது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3BwP1ot
via
No comments