தோனியின் சிறப்பான ஆட்டத்தை பார்த்து ஆனந்தக் கண்ணீரில் ரசிகர்கள்!
மகேந்திர சிங் தோனி என்ற பெயரை கேட்டாலே அவரது அதிரடி ஆட்டம் தான் ரசிகர்களின் மனக் கண்களில் சட்டென நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு சர்வதேச கிரிக்கெட்டில் தனது பேட் மூலம் கோலோச்சியவர். கடந்த 2020 வாக்கில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற அவர் ஐபிஎல் கிரிக்கெட்டில் மட்டுமே விளையாடி வருகிறார்.
இருந்தும் பழைய ஆட்டத்தை ஏனோ தோனி மிஸ் செய்தார். அவரது வயதை சுட்டிக்காட்டி விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டன. இந்த நிலையில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான பிளே-ஆஃப் பத்தியில் ஆறு பந்துகளில் 18 ரன்களை எடுத்ததன் மூலம் மீண்டும் பழைய பார்முக்கு திரும்பியுள்ளார் அவர்.
அதனை பார்த்த தோனியின் ரசிகர்கள் ஆனந்தக் கண்ணீர் மல்க பார்த்து ரசித்தனர். ஆட்டத்தை பார்த்த தோனியின் குட்டி ரசிகை ஒருவரது படம் வைரலாகி இருந்தது.
படம் : நன்றி ஐபிஎல்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3ByQOcv
via
No comments