வேளாண் திருத்த சட்டத்தில் காங்கிரஸ் இரட்டை வேடம்: திருப்பூரில் வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு
திருப்பூர் வடக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில், முதல்வர், பிரதமர் என தொடர்ந்து 20 ஆண்டுகள் மக்கள் பணியாற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் சாதனைகளை விளக்கி, தொடர் ஓவியம் திருப்பூரில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று வரையப்பட்டது.
இதனை பாஜக தேசிய மகளிர் அணித் தலைவியும், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமானவானதி சீனிவாசன் பார்வையிட்டு செய்தியாளர்களிடம் கூறியதாவது: உத்தரபிரதேசத்தில் நடந்த விவசாயிகள் படுகொலை குறித்துஉரிய விசாரணை நடத்தப்பட்டுவருகிறது. குற்றவாளிகள் விரைவில் தண்டிக்கப்படுவார்கள் என, அந்த மாநில முதலமைச்சர் யோகிஆதித்யநாத் தெரிவித்துள்ளார். வேளாண் திருத்த சட்டத்தில் காங்கிரஸ் கட்சி இரட்டை வேடம் போடுகிறது. உத்தரபிரதேச மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் வருவதால்,காங்கிரஸ் கட்சியை வளர்த்துஎடுக்க முயற்சிக்கிறது. வேளாண் சட்டம் மூலம் விவசாயிகள் வாழ்க்கை உயர்ந்து விடும் என்ற எண்ணத்தில், காங்கிரஸ் கட்சி அதனை தடுக்க முயல்கிறது. என்றார். தொடர்ந்து மோடியின் ஓவியத்தை பார்வையிட்டவர், பின்னர் அங்கு கும்மி அடித்துஆடிக்கொண்டிருந்த பெண்களுடன் சேர்ந்து கும்மி ஆடித்து ஆடிப்பாடி மகிழ்ந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2Ypv8AI
via
No comments