Breaking News

கால்நடை கழிவிலிருந்து மின்சாரம் தயாரித்து தெரு விளக்குகளை ஒளிர செய்யும் வரதராஜபுரம் ஊராட்சி

திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி அருகே உள்ள வரதராஜபுரம் ஊராட்சியில் கால்நடை கழிவிலிருந்து மின்சாரம் தயாரிக்கப்பட்டு தெரு விளக்குகள் ஒளிர வைக்கப்படுகின்றன.

வரதராஜபுரம் ஊராட்சியில் 900-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இந்த ஊராட்சியில் 200-க்கும் அதிகமான குடும்பங்கள் கறவை மாடுகள் வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றன. கறவை மாடுகளை வளர்ப்பவர்கள் தெருக்களிலும், குளம் குட்டை, மழைநீர் வடிகால்வாய் உள்ளிட்ட நீர் நிலைகளிலும் மாடுகளின் சாணத்தைகொட்டி வந்ததால், வரதராஜபுரத்தில் சுகாதார சீர்கேடு நிலவி வந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3C3AOPR
via

No comments