Breaking News

என்கவுன்ட்டர் நடந்தும் தொடரும் வழிப்பறி சம்பவங்கள்: ஸ்ரீபெரும்புதூர் பகுதி மக்கள் அச்சம்

ஸ்ரீபெரும்புதூரில் வழிப்பறி திருடனை போலீஸார் என்கவுன்ட்டர் செய்த பிறகும், வழிப்பறி சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதனால் ஸ்ரீபெரும்புதூர் பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம், தொடுகாடு, அசோக் நகரைச் சேர்ந்த பிரேம்குமார், மனைவி தாமரைச்செல்வி(36) ஆகியோர் இருசக்கர வாகனத்தில் ஸ்ரீபெரும்புதூரை நோக்கி கிளாய் கூட்டு ரோடு, புற்றுக்கோயில் அருகில் நேற்று முன்தினம் சென்று கொண்டிருந்தனர். அப்போது பைக்கில் ஹெல்மெட் அணிந்து வந்த 2 மர்ம நபர்கள் தாமரைச் செல்வியின் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தாலிச் செயினை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3B271pn
via

No comments