Breaking News

CSK vs DC : ஒற்றைக் கையால் சிக்சர் அடித்த பண்ட் : நெட்டிசன்கள் மத்தியில் வைரல்!

நடப்பு ஐபிஎல் சீசனில் டெல்லி கேபிடல்ஸ் அணியை வழிநடத்தி வருகிறார் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட். சர்வதேச கிரிக்கெட்டில் இவரது அன்-ஆர்தாடெக்ஸ் ஷாட்கள் மிகவும் பிரபலம். அவ்வபோது அந்த ஷாட்களை ஆடி ரசிகர்களை எண்டர்டயின் செய்வார். 

image

இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான முதல் பிளே-ஆஃப் போட்டியில் ஒற்றைக் கையால் சிக்சர் அடித்து அசத்தியுள்ளார் பண்ட். அந்த ஷாட் இப்போது நெட்டிசன்கள் மத்தியில் வைரலாகி உள்ளது. 

‘பண்ட் ரன் எடுக்க சமயங்களில் பேட் கூட தேவைப்படாது’ என பண்ட் விளாசிய அந்த ஷாட்டை பார்த்து ரசிகர்கள் அசந்து போயுள்ளனர். 

image

சென்னை அணியின் பந்து வீச்சாளர் தாக்கூர் வீசிய 16-வது ஓவரின் இரண்டாவது பந்தில் அந்த ஒற்றைக் கை சிக்சரை அடித்திருந்தார் பண்ட். 35 பந்துகளில் 51 ரன்களை எடுத்து இறுதி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தார் பண்ட். அவரது ஆட்டம் டெல்லி அணி 172 ரன்கள் குவிக்க உதவியது. 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3DHU5XR
via

No comments