நவ.15 முதல் உயர் நீதிமன்றத்துக்குள் செல்ல வழக்கறிஞர்களுக்கு அனுமதி: தலைமைப் பதிவாளர் அறிவிப்பு

கரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதால் வரும் நவ.15-ம் தேதி முதல் வழக்கறிஞர்கள் உயர் நீதிமன்றத்துக்குள் செல்ல அனுமதியளித்து உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் உத்தரவிட்டுள்ளார்.
கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த 2019 ஏப்ரல் முதல் நீதிபதிகள், அரசு வழக்கறிஞர்கள், நீதித்துறை ஊழியர்கள், சிஐஎஸ்எப் போலீஸார் தவிர்த்து வேறு யாரும் உயர் நீதிமன்றத்துக்குள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. வழக்கு விசாரணைகள் காணொலி மூலமாக நடைபெறுவதால் வழக்கறிஞர்கள், குமாஸ்தாக்கள் உயர் நீதிமன்ற வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த பெட்டிகளில் வழக்குகளை தாக்கல் செய்து வந்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3HdMYsm
via
No comments