ஒரே நாளில் ரூ. 34 கோடி ரூபாய் வசூல் செய்த ’அண்ணாத்த’
ரஜினியின் ‘அண்ணாத்த’ வெளியான ஒரே நாளில் 34 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியிருக்கும் ’அண்ணாத்த’ வரும் நேற்று திரைக்கு வந்துள்ளது. 'தர்பார்' படத்திற்கு பிறகு நடிகர் ரஜினி ’சிறுத்தை’ சிவா இயக்கத்தில் 'அண்ணாத்த' படத்தில் நடித்துள்ளார். நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, பிரகாஷ் ராஜ், சூரி, சதீஷ் உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார்.
தீபாவளியை முன்னிட்டு படம் நேற்று தியேட்டர்களில் வெளியானது. அண்ணன் தங்கை பாசக்கதைக்களத்தைக் கொண்ட ‘அண்ணாத்த’ சூப்பர்... சுமார் என்று கலவையான விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கின்றன. இந்த நிலையில், தமிழகத்தில் மட்டும் ‘அண்ணாத்த’ வெளியான ஒரே நாளில் 34 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு முன்பு, ஒரே நாளில் அதிக வசூல் செய்த படங்களில் இரண்டாவது இடத்தில் 2.o படம் 33 கோடியும்,, விஜய்யின் சர்கார் 31 கோடியும் வசூல் செய்தது என்று சொல்லப்படுகிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/2ZX0CiJ
Post Comment
No comments