Breaking News

சென்னை அருகே கரையைக் கடந்தது காற்றழுத்த தாழ்வு மண்டலம்; இடைவிடாத மழையால் தத்தளிக்கும் தலைநகர்: சுரங்க பாதைகள் மூடல்; மின்சாரம் துண்டிப்பு- ‘ரெட் அலர்ட்’ விலக்கப்பட்டதால் மக்கள் நிம்மதி

வங்கக் கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், சென்னை அருகே நேற்று மாலை கரையைக் கடந்தது. இதன் காரணமாக பெய்த இடைவிடாத மழையால் சென்னை மாநகரமே தண்ணீரில் தத்தளித்து வருகிறது. மாநகருக்கான ரெட் அலர்ட்டை வானிலை ஆய்வு மையம் விளக்கிக் கொண்டதால் பொதுக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.

வங்கக் கடலில் கடந்த 9-ம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, நேற்று காலை தென்மேற்கு வங்கக் கடலில் நிலவியது. இது மணிக்கு 16 கி.மீ. வேகத்தில் மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து, சென்னைக்கு அருகே நேற்று மாலை 5.30 மணி அளவில் கரையை கடக்கத் தொடங்கியது. சுமார் 1 மணி நேரத்தில் கரையை கடந்தது. பின்னர் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலு குறைந்து மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து சென்றது. அப்போது சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இரவு முழுவதும் பலத்த தரைக்காற்று மணிக்கு 30 முதல் 40 கி.மீ. வேகத்தில் வீசியது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3qsSjq3
via

No comments