புதுச்சேரிக்கு நேற்று இரவு வருகை தந்தார்: கடலூரில் இன்று மழை சேதங்களை முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்கிறார்

கடலூர் மாவட்டம் மற்றும் காவிரி டெல்டா பகுதிகளில் மழைபாதிப்புகளை இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்கிறார். இதையொட்டி அவர்நேற்று இரவு புதுச்சேரி வந்த டைந்தார்.
இந்த ஆய்வுக்காக விமானம் மூலம் திருச்சி சென்று, அங்கிருந்து காவிரி டெல்டா பகுதிகளில் ஆய்வு செய்வதாக முதல்வர் ஸ்டாலின் முதலில் திட்டமிட்டிருந்தார்‌. அந்தசுற்றுப்பயண திட்டமானது மாற்றப்பட்டது. அவர் நேற்று இரவே புதுச் சேரி வந்தடைந்தார். இங்குள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் தங்கிய அவர், இன்று காலை கடலூர் புறப்பட்டுச் செல்கிறார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3c9TT7Y
via
No comments