உசிலம்பட்டியில் பிறந்த 4 நாட்களில் பெண் சிசு உயிரிழப்பு; மீண்டும் தலைதூக்கும் பெண் சிசுக் கொலை? - தலைமறைவான பெற்றோர் மீது போலீஸ் வழக்கு
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகில் உள்ள பெரியகட்டளை கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி முத்துப்பாண்டி. இவரது மனைவி கவுசல்யா. இந்தத் தம்பதியருக்கு ஏற்கெனவே 2 பெண் குழந்தைகள் உள்ளன. மீண்டும் கருவுற்ற கவுசல்யா, பிரசவத்துக்காக சேடபட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டிச.21-ல் 3-வதாக பெண் குழந்தை பிறந்தது.
மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய நிலையில், டிச.26-ம் தேதி குழந்தை திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்ததாக தகவல் வெளியானது. ஆனால், குழந்தையின் இறப்பில் சந்தேகம் எழுந்ததையொட்டி, பெரியகட்டளை கிராம நிர்வாக அலுவலர் முனியாண்டி, சேடபட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், முத்துப்பாண்டியைத் தேடி அவரது வீட்டுக்குச் சென்றபோது வீடு பூட்டியிருந்தது. குடும்பத்துடன் முனியாண்டி தலைமறைவானதும் தெரியவந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3Jq1myP
via
Post Comment
No comments