ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கி: அரையிறுதிக்குள் நுழைந்தது இந்திய அணி
ஜூனியருக்கான உலகக்கோப்பை ஹாக்கித் தொடரில் இந்திய அணி , பெல்ஜியம் அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் ஜூனியருக்கான உலகக்கோப்பை ஹாக்கி போட்டிகள் நடைபெற்று வருகின்றன. நேற்று நடைபெற்ற நான்காவது மற்றும் கடைசி காலிறுதிப் போட்டியில் இந்தியா, பெல்ஜியம் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. விறுவிறுப்பு நிறைந்த இந்தப் போட்டியில், 21-ஆவது நிமிடத்தில் இந்திய அணி கோல் அடித்து முன்னிலை பெற்றது. பெனால்டி கார்னர் வாய்ப்பை, திவாரி கோலாக மாற்றினார்.
பதில் கோல் அடிக்க பெல்ஜியம் அணி இறுதி வரை போராடியது. எனினும் இந்திய அணி வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு, எதிரணியின் கோல் வாய்ப்புகளை தகர்த்தனர். முடிவில் இந்திய அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றியை வசமாக்கியது. அரையிறுதியில் பலம் வாய்ந்த ஜெர்மனி அணியை எதிர்த்து நாளை விளையாடவுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3EmLM4s
via
No comments