Breaking News

அனுதாபத்தில் வாக்களிக்காதீர்... என் 10 ஆண்டு சேவையை பாருங்கள்! - மதுரையில் மாற்றுத்திறனாளி அதிமுக வேட்பாளர்

மதுரை: அனுபதாபத்தை உருவாக்கி கட்சியில் ‘சீட்’ பெறுவது, அதையே மூலதனமாக கொண்டு தேர்தலில் வாக்கு சேகரிக்கும் வேட்பாளர்களுக்கு மத்தியில் மதுரை திருமங்கலம் நகராட்சி தேர்தலில் போட்டியிடும் 26-வது வார்டு அதிமுக வேட்பாளர் கால் நடக்க முடியாத மாற்றுத்திறனாளி எஸ்.செல்வராஜ் சற்று வித்தியாசமானவர்.

வாக்காளர்களிடம் தவிழ்ந்து சென்று ஆதரவு கேட்கும் இவர், ‘‘நான் இப்படியிருப்பதால் அனுதாபத்தில் யாரும் வாக்களிக்க வேண்டும். எந்த பதவியும், அதிகாரமும் இல்லாமல் கடந்த 10 ஆண்டாக நமது பகுதியில் செய்த என்னுடைய சமூகப்பணியைப்பார்த்து வாக்களியுங்கள்,’’ என்று அவர் பிரச்சாரம் செய்யும் விதம் மக்களை கவர்ந்துள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/hcM1YrP
via

No comments