சென்னை மாநகராட்சி 174-வது வார்டில் 94 வயது ‘கொள்ளுப் பாட்டி’ போட்டி: சமூக ஊடகங்களில் தீவிர பிரச்சாரம்
சென்னை: சென்னை மாநகராட்சி 174-வது வார்டில் போட்டியிடும் 94 வயது கொள்ளுப்பாட்டியால் அரசியல் கட்சி வேட்பாளர்கள் கலக்கமடைந்துள்ளனர். சமூக ஊடகங்களில் தீவிர பிரச்சாரம் செய்து வரும் கொள்ளுப்பாட்டி சின்னம் கிடைத்தபின் வீடு வீடாகச் சென்று பிரச்சாரம் செய்ய முடிவு செய்துள்ளார்.
தமிழகத்தில் ஒரேகட்டமாக வரும் 19-ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. சென்னை மாநகராட்சியில் 13-வது மண்டலமான அடையாறு மண்டலத்துக்கு உட்பட்ட 174-வது வார்டில் களமிறங்கியுள்ளார் 94 வயதான காமாட்சி பாட்டி.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/rTWmFO4
via
No comments