Breaking News

சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம்: சுரங்கப் பாதை பணிகள் விரைவில் தொடக்கம்

சென்னை: சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் சுரங்கப் பாதை அமைப்பதற்கான நிறுவனங்களைத் தேர்வு செய்யும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. எனவே, விரைவில் சுரங்கப் பாதை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட உள்ளன.

சென்னையில் தற்போது இரு வழித்தடங்களில் 54 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில் சேவை இயக்கப்படுகிறது. பொதுமக்களின் தேவையைக் கருத்தில்கொண்டு, சென்னையில் இரண்டாவது கட்டமாக மாதவரம்-சிறுசேரி, மாதவரம்-சோழிங்கநல்லூர், பூந்தமல்லி-விவேகானந்தர் இல்லம் என மூன்று வழித்தடங்களில் மொத்தம் 119 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில்களை இயக்குவதற்கான திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/dj4WZA8
via

No comments