டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் வெளியாகும் ‘ஹிருதயம்’

மோகன்லால் மகன் பிரணவ் மோகன்லாலின் ’ஹிருதயம்’ டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது.
வினீத் சீனிவாசன் இயக்கத்தில் மோகன்லால் மகன் பிரணவ் மோகன்லால் - கல்யாணி பிரியதர்ஷன் , தர்ஷனா ராஜேந்திரன் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘ஹிருதயம்’ கடந்த ஜனவரி மாதம் தியேட்டர்களில் வெளியாகி பாராட்டுகளைக் குவித்து வருகிறது. சென்னையையே ‘ஹிருதயம்’ படத்தின் இதயமாக்கி ’ஹிட்’ அடித்துள்ளார் இயக்குநர் வினீத் சீனிவாசன். தமிழ் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடுவதே, இதற்குச் சாட்சி.

ஏற்கெனவே, இப்படத்தின் ‘தர்ஷனா’ பாடல் வரவேற்பைப் பெற்ற நிலையில், படமும் வெற்றியடைந்துள்ளதால், ஓடிடி குறித்த தகவலை எதிர்பார்த்து காத்திருந்தார்கள் ரசிகர்கள். இந்த நிலையில், ‘ஹிருதயம்’ படத்தின் தியேட்டர் வெளியீட்டிற்குப் பிறகான டிஜிட்டல் உரிமையை டிஸ்னி + ஹாட்ஸ்டார் கைப்பற்றியிருந்தது. இந்த நிலையில், வரும் 18 ஆம் தேதி டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது என்று படக்குழு அறிவித்துள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/r1WS6Fg
No comments