Breaking News

அதிமுக உட்கட்சி தேர்தலை எதிர்த்து வழக்கு தொடர அனுமதி கோரல்: ஒருங்கிணைப்பாளர்கள் பதிலளிக்க உத்தரவு

சென்னை: அதிமுக உட்கட்சி தேர்தலை எதிர்த்து வழக்குத் தொடர அனுமதிகோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் உள்ளிட்டோர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் முதல்வரான ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு பொதுச்செயலாளர் என்ற பதவிநீக்கப்பட்டு, அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவிகள் உருவாக்கப்பட்டன. இது அதிமுகவின் சட்ட திட்டங்களுக்கு எதிரானது எனக்கூறி கட்சி உறுப்பினர்களான வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன், சுரேன் பழனிச்சாமி ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/oWlmgTB
via

No comments