Breaking News

முரசொலி இடம் தொடர்பான அவதூறு வழக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் நேரில் ஆஜராக விலக்கு: விசாரணைக்கு தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: முரசொலி அலுவலக இடம் தொடர்பான அவதூறு வழக்கு விசாரணைக்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக விலக்கு அளித்தும், விசாரணைக்கு தடை விதித்தும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வேலூரில் நடத்த கூட்டம் ஒன்றில் அப்போது தமிழக பாஜக தலைவராக இருந்த எல்.முருகன், ‘முரசொலி’ அலுவலகம் அமைந்துள்ள இடம் பஞ்சமி நிலம் என்றும், அதற்கான மூலப்பத்திரத்தை காட்ட முடியுமா என்றும் பேசியிருந்தார். அவரது பேச்சு அவதூறு பரப்பும் வகையில் உள்ளதாகக் கூறி முரசொலி அறக்கட்டளை நிர்வாகியான ஆர்.எஸ்.பாரதி, சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/qIA9bLD
via

No comments