IPL 2022 | அவேஷ் கான், ஹோல்டர் வேகத்தில் சுருண்ட கொல்கத்தா - 75 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அபார வெற்றி

ஐபிஎல் 53வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தாவை வீழ்த்தி 75 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
177 ரன்கள் என்ற இலக்கை துரத்திய கொல்கத்தா அணிக்கு டாப் ஆர்டர் மிகப்பெரிய சரிவை எதிர்கொண்டது. கடந்த இரண்டு போட்டிகளாக பவுலிங்கில் மிரட்டி வரும் லக்னோ பவுலர் மொஹ்சின் கான் இம்முறை ஓப்பனிங் ஓவரையே சிறப்பாக வீசினார். இன்னிங்ஸின் முதல் ஓவரை தொடங்கி வைத்த அவர், அதை மெய்டனாக வீசியதுடன் தமிழக வீரர் பாபா இந்திரஜித் விக்கெட்டையும் எடுத்து கொல்கத்தா அணிக்கு அதிர்ச்சி கொடுத்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/kw74pm6
No comments