Breaking News

ஜிஎஸ்டி, உற்பத்தி செலவால் தமிழகத்தில் நசுங்கும் தொழில் - மாற்று வேலையை தேடி செல்லும் தோல் பதனிடும் பணியாளர்கள்

வேலூர்: ஜிஎஸ்டி, உற்பத்தி செலவு உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் திருச்சி மாவட்டத்தில் முடங்கிய தோல் பதனிடும் தொழிலால் அத்தொழிலை நம்பியிருந்த தொழிலாளிகள் மாற்றுத் தொழிலை தேடி செல்லும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும் பெரும்பாலான தொழிற்சாலைகள் வீட்டுமனைகளாக மாறி வருவது தொழில் ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் ஏற்றுமதி வர்த்தகத்தில் தோல் மற்றும் தோல் பொருட்கள் முக்கிய இடம் வகிக்கிறது. உலக அளவில் தோல் தொழிற்சாலைகளுக்குத் தேவைப்படும் மூலப் பொருட்களுக்கான மாட்டுத் தோல் மற்றும் ஆட்டுத்தோல் முறையே 20 சதவீதம், 11 சதவீதம் இந்தியாவின் பங்களிப்பாகும். இந்தியாவில் ஆண்டுக்கு 320 கோடி சதுர அடி தோல் மூலப்பொருள் உற்பத்தி செய்யப்படுகிறது. இத்தொழிலை நம்பி நாட்டில் சுமார் 45 லட்சம் பேர் தங்கள் வாழ்வாதாரமாக வாழ்ந்து வருகின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/5MTWdon
via

No comments