பிரதமருடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு - தமிழகத்தின் தேவைகள் குறித்த கோரிக்கை மனுவை அளித்தார்

சென்னை: டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சந்தித்துப் பேசினார். அப்போது, செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைத்ததற்காக பிரதமருக்கு நன்றி தெரிவித்த முதல்வர், தமிழகத்தின் கோரிக்கைகள் அடங்கிய மனுவையும் அளித்தார். முன்னதாக, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் ஆகியோரை முதல்வர் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி, கடந்த ஜூலை 28 முதல் ஆக.9 வரை நடந்தது. ஜூலை 28-ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்த தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று போட்டியை தொடங்கி வைத்தார். விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்நிலையில், பிரதமரை சந்தித்து, நன்றி தெரிவிப்பதற்காக முதல்வர் ஸ்டாலின், நேற்று முன்தினம் இரவு டெல்லி சென்றார். அவருடன் தலைமைச் செயலர் வெ.இறையன்பு, முதல்வரின் செயலர்கள் சென்றனர். நள்ளிரவு டெல்லி சென்ற முதல்வரை டி.ஆர்.பாலு, கனிமொழி, ஆ.ராசா உள்ளிட்ட எம்.பி.க்கள், டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் உள்ளிட்டோர் வரவேற்றனர். அன்றிரவு முதல்வர் அங்கு தங்கினார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/sYAyQMj
via
No comments