Breaking News

ஜூலை 11-ல் நடந்த மோதல் தொடர்பாக அதிமுக தலைமை அலுவலகத்தில் சிபிசிஐடி மீண்டும் விசாரணை

சென்னை: ஜூலை 11-ம் தேதி நடந்த மோதல் சம்பவம் தொடர்பாக அதிமுக தலைமை அலுவலகத்தில் சிபிசிஐடி போலீஸார் 2-வது முறையாக விசாரணை மேற்கொண்டனர்.

அதிமுக பொதுக்குழுக் கூட்டம், பழனிசாமி ஏற்பாட்டில் சென்னை வானகரத்தில் கடந்த ஜூலை 11-ம் தேதி நடைபெற்றது. அந்த நேரத்தில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்கு ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் வந்தார். அப்போது, ஓபிஎஸ் - இபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டு கலவரமாக மாறியது. இரு தரப்பினரும் கற்களை வீசி தாக்கிக் கொண்டனர். இதில், 47 பேர் காயமடைந்தனர். பேருந்து, கார், இருசக்கர வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/0SmjdqK
via

No comments