மாணவர்களை நல்வழிப்படுத்தும் ‘சிற்பி’ திட்டம் - சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை: மாணவர்களை நல்வழிப்படுத்தும் ‘சிற்பி’ திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘சிறுவர்களை சமூக ஒழுக்கத்துடன் வளர்க்க வேண்டியது நம் கடமை’ என்று வலியுறுத்தினார்.
பள்ளி மாணவர்களை நல்வழிப்படுத்தும் வகையில் சென்னை மாநகர காவல்துறை சார்பில் ‘சிற்பி’ என்ற புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்கீழ், சென்னை மாநகராட்சியில் 100 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு, ஒவ்வொரு பள்ளியில் இருந்தும் தலா 50 மாணவர்களுக்கு புதிய சீருடை மற்றும் பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. சிறார் குற்றங்களை தடுக்கவும், போதைப்பொருள் உள்ளிட்ட தீய பழக்கங்களை தவிர்க்கவும் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/ciS5vXB
via
No comments