எந்த அணிகளை எல்லாம் இந்தியா எதிர்கொள்கிறது தெரியுமா.! முடிவுக்கு வந்த சூப்பர் 12 பட்டியல்!
டி20 உலககோப்பையில் இந்தியா எந்த 5 அணிகளை எதிர்கொள்ள போகிறது என்ற பட்டியல் பல அதிரடி திருப்பங்களுடன் முடிவுக்கு வந்திருக்கிறது. ஏற்கனவே குரூப் 2 பிரிவில் பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, வங்கதேச அணிகளை எதிர்கொள்ளப்போவது உறுதியான நிலையில் மீதமுள்ள 2 அணிகள் எது என்பதும் உறுதியாகியுள்ளது.
டி20 உலககோப்பை போட்டிகள் குரூப் ஸ்டேஜ் பிரிவு, சூப்பர் 12 பிரிவு என இரண்டு பிரிவுகளாய் பிரிக்கப்பட்டு அதில் மொத்தம் 42 போட்டிகள் நடத்தப்பட்டு அதில் சிறப்பாக செயல்பட்டு வெற்றியைபெறும் அணிகள் அடுத்தடுத்த சுற்றுக்கு முன்னேறி அரையிறுதிக்குள் நுழையும் என்று அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளது.
அந்த வகையில் குரூப் ஸ்டேஜ் சுற்று போட்டிகள் தொடங்கப்பட்டு தற்போது முடிவை எட்டியுள்ளன. பல அணிகள் பெரிய அணிகளுக்கு அதிர்ச்சியளித்து அபார வெற்றியை பெற்று சூப்பர் 12 சுற்றுக்கு சென்றுள்ளன. 2022 டி20 உலககோப்பையில் முதல் ஹாட் டிரிக் விக்கெட்டுகள், அதிரடி கேட்ச்கள், அரைசதங்கள் என சுவாரசியத்திற்கு குறைவில்லாமல் குரூப் சுற்று போட்டிகள் முடிவுக்கு வந்துள்ளன. 4 அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறி சுப்பர் 12 அணிகள் பட்டியல் முடிவுக்கு வந்துள்ளது.
இந்திய அணி சூப்பர் 12 சுற்றில் பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, வங்கதேசம் அணிகளுடன் மட்டுமில்லாமல் புதிதாக சூப்பர் 12 சுற்றுக்குள் வந்திருக்கும் நெதர்லாந்து மற்றும் ஜிம்பாபே அணிகளுடன் 5 போட்டிகளில் விளையாட உள்ளது.
முதல் போட்டி : இந்தியா vs பாகிஸ்தான்
உலககோப்பையின் முக்கிய போட்டியாக பார்க்கப்படும் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதும் சூப்பர் 12 போட்டி, அக்டோபர் 23 ஞாயிறு அன்று பகல் 1.30 மணிக்கு தொடங்கி நடைபெற இருக்கிறது. இந்த போட்டியைக் காண சுமார் 90,000 பார்வையாளர்கள் வரை முன்பதிவு செய்துள்ளனர். கிரிக்கெட் வரலாற்றில் அதிக பார்வையாளர்கள் கொண்ட போட்டியாக இது பதிவிடப்பட போகிறது.
2ஆவது போட்டி : இந்தியா vs நெதர்லாந்து
இந்தியா நெதர்லாந்து அணியுடன், அக்டோபர் 27 அன்று வியாழகிழமை பகல் 12.30 மணிக்கு மோதுகிறது.
3ஆவது போட்டி : இந்தியா vs தென்னாப்பிரிக்கா
இந்தியாவுக்கு சவால் அளிக்கக்கூடிய மற்றொரு அணியாக தென்னாப்பிரிக்கா இருப்பதால் இந்த போட்டியும் அதிக கவனத்திற்கு உரிய போட்டியாக பார்க்கப்படுகிறது. இந்த போட்டி அக்டோபர் 30 ஞாயிறு அன்று மாலை 4.30 மணிக்கு நடக்க உள்ளது.
4ஆவது போட்டி : இந்தியா vs வங்கதேசம்
இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் நவம்பர் 2ஆம் தேதி புதன் கிழமை பகல் 1.30 மணிக்கு மோதுகின்றன.
5ஆவது போட்டி : இந்தியா vs ஜிம்பாபே
சூப்பர் 12 சுற்றின் இறுதி போட்டியாக இந்தியா ஜிம்பாபே அணியை நவம்பர் 6 ஞாயிறு கிழமை பகல் 1.30 மணிக்கு எதிர்கொள்கிறது.
சிறப்பாக விளையாடி வரும் இந்திய அணி 4-1 அல்லது 5-0 என்ற கணக்கில் அரையிறுதிக்குள் நுழையும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/A9RzXT0
via
No comments