கர்நாடகா: ரேஷன் அட்டைகளில் சர்ச்சையைக் கிளப்பிய இயேசு, லட்சுமி படங்கள்! - விளக்கமளித்த அதிகாரிகள்
கர்நாடக மாநிலம், ராம்நகரா மாவட்டத்தில் ரேஷன் அட்டைகளின் பின்புறத்தில், இயேசு கிறிஸ்து மற்றும் லட்சுமி தேவியின் உருவங்கள் அச்சடிக்கப்பட்ட படங்கள் இணையத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், இந்தச் சம்பவம் குறித்து மாவட்ட நிர்வாகம் விளக்கமளித்திருக்கிறது.
கர்நாடகாவின் ராம்நகர் மாவட்டத்தின் தொடா அலனஹள்ளி எனும் கிராமத்தில் வழங்கப்பட்ட ரேஷன் அட்டைகளின் பின்புறத்தில் இயேசு கிறிஸ்து மற்றும் லட்சுமி தேவியின் உருவப் படங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த ரேஷன் அட்டைகளின் புகைப்படங்கள் இணையத்தில் பரவ சர்ச்சை வெடித்தது.
இந்தச் சம்பவத்துக்கு, ஸ்ரீராம் சேனா உள்ளிட்ட இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்ததோடு, விசாரணை நடத்த வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளன. மேலும், கிறித்தவத்தை திணிக்க முயற்சிகள் நடப்பதாக இந்து ஆர்வலர்களும், பா.ஜ.க தலைவர்களும் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்த விவகாரம் சலசலப்பை ஏற்படுத்தியதையடுத்து, அதிகாரிகள் கடந்த புதன்கிழமை (19-10-22) இது தொடர்பாக விளக்கமளித்திருக்கின்றனர்.
இது குறித்து உணவு மற்றும் குடிமைப் பொருள்கள் வழங்கும் துறையின் மாவட்ட இணை இயக்குநர் ரம்யா ஊடகங்களிடம் பேசுகையில், ``அரசு இந்தப் படங்களை அச்சிடவில்லை. இவை உள்ளூர் சைபர் கஃபே ஒன்றில் அச்சிடப்பட்ட அட்டைகள். இந்த அட்டைகள் பற்றிய புகார்கள் அலுவலகத்துக்கு வந்திருக்கின்றன. விரைவில் இந்தச் சம்பவம் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
from தேசிய செய்திகள் https://ift.tt/MYS72VE
No comments