Breaking News

இந்தியாவில் முதல்முறை | தமிழகத்தில் அமைகிறது சித்த மருத்துவ பல்கலைக்கழகம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

திண்டுக்கல்: இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்தில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமையவுள்ளது. இதற்கு முதற்கட்டமாக ரூ.2 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசினார்.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் உள்ள புகையிலை ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் அஸ்வகந்தா பயிர் சாகுபடி திட்டம் துவக்க விழா நடைபெற்றது. திண்டுக்கல் ஆட்சியர் ச.விசாகன் தலைமை வகித்தார். மாநில மூலிகை தாவர வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சு.கணேசன் வரவேற்றார். அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, அர.சக்கரபாணி ஆகியோர் பேசினர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/cK2wl6E
via

No comments