Breaking News

மர்ம தேசம் சீரியலில் ‘குட்டி ராசு’ ஆக நடித்த ’லோகேஷ்’ எடுத்த விபரீத முடிவு!

90களின் காலகட்டத்தில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மர்ம தேசம் விடாது கருப்பு என்ற திகில் சீரியலை எவருமே மறந்திருக்க மாட்டார்கள். இந்த சீரியல் வெளியாகி 25 ஆண்டுகள் ஆனதை அடுத்து அண்மையில் கூட மர்ம தேச சீரியலில் நடித்த நட்சத்திர பட்டாளங்கள் சந்தித்தது சமூக வலைதளங்களில் வைரலானது.

இப்படி இருக்கையில் மர்ம தேசம், ஜீ பூம்பா போன்ற சீரியலில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அசத்திய லோகேஷ் ராஜேந்திரன் தற்கொலை செய்துக்கொண்டுள்ள சம்பவம் திரை உலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

image

மர்ம தேசம் சீரியலில் குட்டிராசுவாக நடித்து அதகளப்படுத்தியிருப்பார் லோகேஷ். இயக்குநர் நாகாவின் அறிவுறுத்தலின் பேரில் நடிப்பை விட்டுவிட்டு இயக்குநராவதற்கான பணிகளில் ஈடுபட்டார். இதற்காக பல குறும்படங்களையும் லோகேஷ் இயக்கியிருக்கிறார். விரைவில் தமிழ் சினிமாவில் இயக்குநராவதற்கான முயற்சிகளிலும் லோகேஷ் ஈடுபட்டு வந்திருக்கிறார்.

இந்த நிலையில்தான் லோகேஷ் ராஜேந்திரன் தற்கொலை செய்துக்கொண்டிருப்பது திரையுலகினர் உள்ளிட்ட பலரையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. இதனையடுத்து லோகேஷின் தற்கொலைக்கு என்ன காரணம் என போலீசார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். அவர் மரணம் அடைவதற்கு முன்பு பணப்பிரச்னைகளில் இருந்ததாக கூறப்படுகிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/UdQiOgN

No comments