Breaking News

இன்றே தீபாவளி கொண்டாட வைத்த விராட் கோலி - கடைசி பந்தில் இந்தியா த்ரில் வெற்றி

டி20 உலகக்கோப்பையில் கடைசி ஓவரின் கடைசி பந்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா திரில் வெற்றி பெற்றது ரசிகர்களுக்கு தீபாவளி விருந்தாக அமைந்தது.  

டி20 உலகக்கோப்பையில் சூப்பர் 12 சுற்றின் இன்றைய போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 8 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக மசூத் 42 பந்துகளில் 52 ரன்களும், இப்திகார் அகமது 34 பந்துகளில் 51 ரன்களும் எடுத்தனர். இதனைத்தொடர்ந்து 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா அணியின் தொடக்க வீரர்களாக கே.எல். ராகுல், ரோகித் சர்மா களமிறங்கினர். ஆனால், இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. ராகுல், ரோகித் சர்மா, சூர்யகுமார், அக்சர் படேல் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர். 6.1 ஓவரில் இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 31 ரன்கள் மட்டுமே எடுத்து திணறியது.

image

பின்னர் ஹர்திக் பாண்டியா உடன் ஜோடி சேர்ந்த விராட் கோலி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கடைசி ஓவரில் இந்திய அணிக்கு 16 ரன்கள் தேவைப்பட்டது. 40 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பாண்டியா 19.1 ஓவரில் அவுட் ஆனார். அடுத்து தினேஷ் கார்த்திக் 19.5 ஓவரில் அவுட் ஆனார். இறுதியில் ஆட்டத்தின் கடைசி பந்தில் 1 ரன் தேவைப்பட்டது. அப்போது, களத்தில் இருந்த அஸ்வின் 1 ரன் எடுத்தார். இதன் மூலம் வெற்றி இலக்கான 160 ரன்னை இந்தியா எட்டியது. பாகிஸ்தானை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றிபெற்றது. விராட் கோலி 53 பந்துகளில் 82 ரன்னுடன் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார்.

டி20 உலகக்கோப்பையில் கடைசி ஓவரின் கடைசி பந்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா திரில் வெற்றிபெற்றது ரசிகர்களுக்கு தீபாவளி விருந்தாக அமைந்தது.

image

வெற்றிக்குப் பிறகு விராட் கோலி பேசுகையில், ''உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான இந்தப் போட்டியே என் வாழ்க்கையின் மிகச் சிறந்த இன்னிங்ஸ் இதுதான். தற்போது பேசுவதற்கு சத்தியமாக என்னிடம் வார்த்தைகள் இல்லை. இதெல்லாம் எப்படி நடந்தது என்று எனக்குத் தெரியவில்லை. கடைசி வரை நம்மால் களத்தில் இருக்க முடியும் நம்புங்கள் என்று என்னிடம் ஹர்திக் சொல்லிக்கொண்டே இருந்தார்.

நான் வார்த்தைகளை இழந்தவனாக இருந்தேன். எங்களின் திட்டம் மிக எளிமையானது. நவாஸ் பந்துவீச ஒரு ஓவர் இருந்தது. நான் ஹாரிஸ் ஓவரை அடித்தால், கடைசி ஓவருக்கு அவர்கள் பீதி அடைந்து விடுவார்கள். இதன்படியே கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவை என்ற நிலை வந்தது. ஹாரிஸ் ஓவரில் இரண்டு சிக்சர்கள் வந்தது நாங்கள் நினைத்த மாதிரியே நடந்தது. முன்பு மொகாலியில் 52 பந்துகளுக்கு 82 ரன்கள் விளாசிய ஆட்டத்தை என்னுடைய சிறந்த இன்னிங்ஸ் என்று சொல்லியிருந்தேன். தற்போது ஐம்பத்தி மூன்று பந்தில் 82 ரன்கள் வந்திருக்கிறது. இதுவும் என்னுடைய சிறந்த இன்னிங்ஸ். நீங்கள் தொடர்ந்து என்னை ஆதரித்தீர்கள். உங்கள் அனைவருக்கும் எனது நன்றி'' என தெரிவித்துள்ளார்.


Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/9ApitcT
via

No comments