Breaking News

BP-ஐ எகிற வைத்த பைனல்! சாதித்து காட்டிய மெஸ்ஸி! அர்ஜெண்டினா 3ஆவது முறை சாம்பியன்!

கத்தார் கால்பந்து உலகக்கோப்பையின் இறுதிப்போட்டி பரபரப்பான போட்டியாக மாறி ரசிகர்களுக்கு விருந்து படைத்துள்ளது. விறுவிறுப்பான போட்டியில் பெனால்டி சூட் முறையில் 4-2 என்ற கணக்கில் கோப்பையை கைப்பற்றி அசத்தியது மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா அணி.

பலவிதமான எதிர்ப்பார்ப்புகளுக்கிடையே பிரான்ஸ் மற்றும் அர்ஜெண்டினா அணிகள் 2022 கத்தார் உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில் மோதின. இறுதிப்போட்டியில் பிரான்ஸ் அணியை வீழ்த்திய அர்ஜெண்டினா அணி 1978, 1986 ஆண்டுகளுக்கு பிறகு 3ஆவது முறையாக 2022ல் அபாரமாக வெற்றிபெற்று கோப்பையை கைப்பற்றி அசத்தியுள்ளது மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா அணி.

முதல் பாதியில் அர்ஜெண்டினா 2-0 முன்னிலை!

image

போட்டி தொடங்கியதிலிருந்தே பரபரப்பான ஆட்டமாக மாறியது இறுதிப்போட்டி. போட்டியின் 23ஆவது நிமிடத்திலேயே பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி கோலாக மாற்றினார் அர்ஜெண்டினா கேப்டன் மெஸ்ஸி. பின்னர் 36ஆவது நிமிடத்தில் டி மரியா அருமையான கோலை அடிக்க முதல் பாதிலேயே 2-0 என்று முன்னிலை பெற்று அசத்தியது அர்ஜெண்டினா அணி.

2 நிமிடங்களில் 2 கோல்களை அடித்து போட்டியை மாற்றிய எம்பாப்வே!

image

பிரான்ஸ் அணியின் நட்சத்திர வீரர் எம்பாப்வே 80ஆவது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை கோலாக மாற்றி அசத்த, அடுத்த ஒரு நிமிடத்திலேயே 81ஆவது நிமிடத்தில் இன்னொரு அபாரமான கோலை அடித்த எம்பாப்வே இறுதிகட்டத்தில் 2-2 என சமனில் முடிந்தது போட்டி.

சமனில் முடிந்து 30 நிமிடங்கள் எக்ஸ்டிரா டைம்!

போட்டி சமனில் முடிந்த நிலையில், கூடுதலாக 30 நிமிடங்கள் வழங்கப்பட்ட நிலையில் 108 ஆவது நிமிடத்தில் கோலடித்தார் மெஸ்ஸி. பின்னர் போட்டியில் அர்ஜெண்டினா அணியே வெற்றிபெரும் என்ற நிலையில், 118ஆவது நிமிடத்தில் மீண்டும் பெனால்டி வாய்ப்பை கோலாக மாற்றி திருவிழாவாக மாற்றினார் பிரான்ஸ் அணியின் எம்பாப்வே.

3-3 என முடிந்த நிலையில் கூடுதல் 3 நிமிடங்கள்!

மீண்டும் சமனில் முடிந்து சுவாரசியம் அதிகமாக ரசிகர்களின் ஆரவாரம் அதிகமாகியது. கடைசியாக வழங்கப்பட்ட 3 நிமிடங்களில் யாரும் கோல் அடிக்காத நிலையில் போட்டி பெனால்டி சூட் முறைக்கு சென்றது.

பெனால்டி சூட்டில் 4-2 என்று அபாரமாக வெற்றிபெற்ற அர்ஜெண்டினா!

image

பெனால்டி சூட்டில் முதல் வாய்ப்பை மீண்டும் கோலாக மாற்றினர் மெஸ்ஸி மற்றும் எம்பாப்வே இருவரும். அடுத்தடுத்த இரண்டு வாய்ப்புகளில் பிரான்ஸ் அணியை தடுத்து நிறுத்தினார் அர்ஜெண்டினா அணியின் கோல் கீப்பர். பின்னர் அடுத்தடுத்த வாய்ப்புகளை அர்ஜெண்டினா கோலாக மாற்ற 4-2 என்ற கணக்கில் அர்ஜெண்டினா அபாரமான வெற்றியை பதிவு செய்தது.

விறுவிறுப்பாக எப்போதும் இல்லாத நிலையில் கொண்டாட்டத்தின் உச்சிக்கே கொண்டு சென்றனர் அர்ஜெண்டினா மற்றும் பிரான்ஸ் அணியினர். மொத்தத்தில் போட்டி உலக ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது.

கோப்பையுடன் விடைபெற்றார் நட்சத்திரம் மெஸ்ஸி!

image

இந்த உலகக்கோப்பை தான் கடைசி உலகக்கோப்பை என்று அறிவித்திருந்தார் மெஸ்ஸி. இந்நிலையில் கோப்பையோடு மகிழ்ச்சியான நினைவுகளோடு விடைபெறுகிறார் மாடர்ன் புட்பால் ஜாம்பவான் மெஸ்ஸி.

பைனலில் போட்டியில் 4 கோல்கள் அடித்து அசத்திய எம்பாப்வே!

image

ஒரு பைனலில் 4 கோல்களை அடித்து அசத்தி இறுதிப்போட்டியை திருவிழாவாக மாற்றிய எம்பாப்வே.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/DN9cjKE
via

No comments