Breaking News

'அசால்ட்' பண்ணிய அர்ஜென்டினா, 'நொங்கெடுத்த' நெதர்லாந்து - FIFA உலகக் கோப்பை சுவாரஸ்யம்

கத்தார் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நேற்று நடைபெற்ற போட்டிகளில் வெற்றிபெற்றதன் மூலம் நெதர்லாந்து மற்றும் அர்ஜென்டினா அணிகள் காலிறுதிக்கு முன்னேறியது.

கெத்து காட்டும் கத்தார் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நேற்று, காலிறுதிக்கு முந்தைய சுற்று போட்டிகள் நாக் அவுட் முறையில் நடைபெற்றது. இரவு 8.30 மணிக்கு நடைபெற்ற போட்டியில் நெதர்லாந்து அமெரிக்க அணியுடன் பலப்பரீட்சை நடத்தியது. இதில், முதல்பாதி ஆட்டத்தின் 10-வது நிமிடத்தில் நெதர்லாந்து வீரர் டிபே ஒரு கோலும், கூடுதல் நேர ஆட்டத்தின் 45+1-வது நிமிடத்தில் பிளைண்ட் ஒரு கோலும் அடித்தனர். இந்நிலையில், முதல்பாதி ஆட்டத்தின் முடிவில் நெதர்லாந்து அணி 2 கோல்கள் அடித்து 2:0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

image

இதையடுத்து நடைபெற்ற இரண்டாவது பாதி ஆட்டத்தின் 76-வது நிமிடத்தில் அமெரிக்க வீரர் ரைட் தனது அணிக்காக ஒருகோல் அடித்தார். இதைத் தொடர்ந்து இரு அணி வீரர்களும் களத்தில் நீயா நானா என கடுமையாக மோதிக் கொண்டனர், இந்நிலையில், ஆட்டத்தின் 81-வது நிமிடத்தில் நெதர்லாந்து வீரர் டம்ஃப்ரைஸ் ஒருகோல் அடித்து தங்கள் அணியின் வெற்றியை உறுதி செய்தார். போட்டியின் முடிவில் 3:1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்ற நெதர்லாந்து காலிறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

image

இதைத் தொடர்ந்த நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெற்ற மற்றொரு போட்டியில் பலம்வாய்ந்த அர்ஜென்டினா அணி ஆஸ்திரேலியா அணியை எதிர்கொண்டது. இதில். தனது 1000வது போட்டியில் களம்கண்ட அர்ஜென்டினா வீரர் கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி முதல்பாதி ஆட்டத்தின் 35-வது நிமிடத்தில் ஒருகோல் அடித்து தனது அணியை முன்னிலை படுத்தினார். இந்நிலையில், முதல்பாதி ஆட்டத்தின் முடிவில் அர்ஜென்டினா அணி 1:0 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது.

image

இதையடுத்து நடைபெற்ற இரண்டாவது பாதி ஆட்டத்தின் 57-வது நிமிடத்தில் அர்ஜென்டினா அணி வீரர் அல்வாரெஜ் ஒருகோல் அடித்து தனது அணியின் வெற்றியை உறுதி செய்தார். இதைத் தொடர்ந்து ஆட்டத்தின் 77-வது நிமிடத்தில் ஆஸ்திரேலிய வீரர் பெர்மாண்டஸ் ஒருகோல் அடித்து தனது அணிக்கு ஆறுதல் அளித்தார். இறுதியில் 2:1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்ற அர்ஜென்டினா அணி காலிறுதிக்கு முன்னேறியது.

image

இந்நிலையில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெற உள்ளது. இரவு 8.30 மணிக்கு நடைபெறும் முதல் போட்டியில் பிரான்ஸ் போலந்து அணியுடன் மோத உள்ளது. அதேபோல் நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெறும் மற்றொரு போட்டியில் இங்கிலாந்து செனகல் அணியை எதிர்கொள்கிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/jvXZFWn
via

No comments