Breaking News

Live updates: ``ஸ்டாலின் ஏன் பிரதமர் வேட்பாளராக இருக்கக் கூடாது?” - சென்னை வந்த ஃபரூக் அப்துல்லா

`ஸ்டாலின் ஏன் பிரதமர் வேட்பாளராக இருக்கக் கூடாது?” - ஃபரூக் அப்துல்லா

முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் பொதுக்கூட்ட நிகழ்வில் கலந்துகொள்ள சென்னை வந்த காஷ்மீரின் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா, செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், ``இது ஓர் அற்புதமான ஆரம்பம். ஸ்டாலினும், தி.மு.க-வும் தேசத்தின் ஒற்றுமையைக் காண்பதில் சிறப்பாகச் செயல்பட்டிருக்கின்றனர். இந்தியா என்பது வேற்றுமையில் ஒற்றுமை. வேற்றுமையைப் பாதுகாத்தால், ஒற்றுமையைக் காப்பீர்கள். எனவே, காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இந்தியாவை இணைக்க முயல்கின்றனர். இது மேலும் வலுப்பெறும் என்று நம்புகிறேன், மற்ற தலைவர்களும் இதே வகையில் சிந்திப்பார்கள் என்று நம்புகிறேன்” என்றார்,

பின்னர் செய்தியாளர்கள், 2024 தேர்தல் குறித்தும் பிரதமர் வேட்பாளர் குறித்தும் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ஃபரூக் அப்துல்லா, ``நாம் அனைவரும் ஒன்றிணைந்து வெற்றிபெறும்போது, இந்த தேசத்தை வழிநடத்தி ஒன்றிணைக்க சிறந்த மனிதர் யார் என்பதை முடிவுசெய்வார்கள்” என்றார். தமிழக முதல்வர் ஸ்டாலின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படுவாரா என்று கேள்வி எழுப்பினர், அதற்கு பதிலளித்த ஃபரூக் அப்துல்லா, ``ஏன் முடியாது... ஏன் அவரால் பிரதமராக முடியாது... அதில் என்ன தவறு?”

மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் பொதுக்கூட்டம்

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்தநாளை முன்னிட்டு தி.மு.க சார்பில் சென்னையில் பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில், அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஏற்பாட்டின்பேரில் நடைபெறும் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவரும், ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வருமான ஃபரூக் அப்துல்லா, சமாஜ்வாடி கட்சித் தலைவரும், உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சித் தலைவரும், பீகார் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர். நிகழ்ச்சியின் நிறைவாக முதல்வர் ஸ்டாலின் உரையாற்றவிருக்கிறார்.

பொதுக்கூட்ட முன்னேற்பாடுகள்
பொதுக்கூட்ட முன்னேற்பாடுகள்
பொதுக்கூட்ட முன்னேற்பாடுகள்
பொதுக்கூட்ட முன்னேற்பாடுகள்

அடுத்தாண்டு நாடாளுமன்றத் தேர்தலை நாடு சந்திக்க இருக்கும் நிலையில், பா.ஜ.க கூட்டணிக்கு எதிரான தேசிய அளவில் வலுவான கூட்டணியை அமைக்க ஸ்டாலின் இந்த முயற்சிகளை எடுத்துவருவதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.



from India News https://ift.tt/kjNYlRU

No comments