Breaking News

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்; நாளை காலை 8 மணிக்குத் தொடங்குகிறது வாக்கு எண்ணிக்கை!

காலை 8 மணிக்குத் தொடங்குகிறது வாக்கு எண்ணிக்கை!

ஈரோடு கிழக்குத் தொகுதியில் கடந்த மாதம் 27-ம் தேதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவானது, இரவு 9:30 மணி வரை நீடித்தது. எந்தவித சலசலப்பு, சச்சரவுகளுமின்றி வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடந்து முடிந்தது. இந்தத் தேர்தலில் 74.79 சதவிகித வாக்குகள் பதிவாகியிருப்பதாகத் தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், நாளைய தினம் ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவு அறிவிக்கப்படவிருக்கிறது. வாக்கு எண்ணிக்கை நாளை காலை 8 மணிக்குத் தொடங்குகிறது.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்

அதன் காரணமாக போலீஸார் அந்தத் தொகுதியில் அதிக அளவில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர். வெற்றிபெறும் வேட்பாளரிடம் `வெற்றிச் சான்றிதழ்' வழங்கப்படும் வரை போலீஸார் பாதுகாப்புப் பணியில் இருப்பார்கள் என்று கூறப்படுகிறது. இந்தத் தேர்தல் முடிவானது தமிழக அரசியல் களத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.



from India News https://ift.tt/SX7VHxA

No comments