Breaking News

சிட்னி டெஸ்ட் | ஆஸ்திரேலியா 475 ரன்கள் குவிப்பு: உஸ்மான் கவாஜா 195*, ஸ்மித் 104 ரன்கள் விளாசல்

சிட்னி: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 475 ரன்கள் குவித்தது. உஸ்மான் கவாஜா இரட்டை சதத்தை நெருங்கும் நிலையில் ஸ்டீவ் ஸ்மித்தும் சதம் விளாசி அசத்தினார்.

சிட்னியில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் மழையால் பாதிக்கப்பட்ட முதல் நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 47 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்தது. டேவிட் வார்னர் 10, மார்னஸ் லபுஷேன் 79 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். உஸ்மான் 54 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். நேற்று 2-வது நாள் ஆட்டத்தை ஆஸ்திரேலிய அணி தொடர்ந்து விளையாடியது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/abM2AXW

No comments