Breaking News

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியால் மழை பெய்ய வாய்ப்பு

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பூமத்திய ரேகையை ஒட்டிய இந்தியப் பெருங்கடலின் கிழக்கு பகுதிகள், அதை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த 2 நாட்களில் மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடையக்கூடும். அதன் பிறகு, தொடர்ந்துமேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து 31-ம் தேதி தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்ததாழ்வு மண்டலமாக வலுவடைந்து,பிப்.1-ம் தேதி இலங்கை கடற்பகுதியை சென்றடையக்கூடும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/TBplqZv
via

No comments