Breaking News

IND Vs NZ: நியூசிலாந்தை பந்தாடுமா இந்திய அணி? ஸ்ரேயாஸூக்கு பதில் களமிறங்க போவது யார்?

இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி, ஹைதராபாத்தில் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது.

இந்தியா வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி தலா 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடுகிறது. முதலில் ஒருநாள் தொடர் நடைபெறுகிறது. இதன்படி இந்தியா-நியூசிலாந்து இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் இன்று (புதன்கிழமை) பகலிரவு ஆட்டமாக நடைபெறுகிறது. ஒருநாள் உலகக் கோப்பை தொடர் நெருங்கிவரும் நிலையில் இந்த தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

image

சமீபத்தில் இலங்கையுடன் நடந்த டி20 மற்றும் ஒருநாள் தொடரை அபாரமாக வென்ற இந்திய அணி, அதே உத்வேகத்துடன் நியூசிலாந்தையும் எதிர்கொள்கிறது. விராட் கோலி தொடர்ச்சியாக சதங்கள் விளாசி ஃபார்முக்கு திரும்பியுள்ளது இந்திய அணிக்கு பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. கேப்டன் ரோகித் சர்மா, சுப்மான் கில் ஆகியோரும் அருமையான ஃபார்மில் உள்ளனர்.

அதேபோல் முகமது சிராஜ், முகமது ஷமி, குல்தீப் யாதவ் ஆகியோர் பந்து வீச்சிலும் நல்ல நிலையில் உள்ளனர். காயம் காரணமாக ஸ்ரேயாஸ் அய்யர் விலகி இருப்பதால் அவருக்குப் பதிலாக, இந்திய அணியில் ரஜத் பத்திதார் சேர்க்கப்பட்டுள்ளார். ஸ்ரேயாஸ் அய்யர் இடத்தில் சூரியகுமார் யாதவும், ஓய்வளிக்கப்பட்டுள்ள அக்சர் படேல் இடத்தில் வாஷிங்டன் சுந்தரும் களமிறக்கப்படலாம் எனத் தெரிகிறது.

image

நியூசிலாந்து அணியில் கேப்டன் கேன் வில்லியம்சன், வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுதி ஆகியோர் இந்தியாவுக்கு எதிரான தொடரில் விளையாடவில்லை. இளம் பட்டாளத்துடன் களமிறங்கும் நியூசிலாந்து அணியை டாம் லாதம் வழிநடத்துகிறார். சமீபத்தில் பாகிஸ்தான் மண்ணில் ஒரு நாள் தொடரை வென்ற கையோடு இந்தியாவுக்கு வந்துள்ள நியூசிலாந்து அணியினர், இந்திய அணிக்கு கடும் சவால் அளிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல்:-

இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்) சுப்மான் கில், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், ஹர்திக் பாண்ட்யா, வாஷிங்டன் சுந்தர் அல்லது ஷபாஸ் அகமது, குல்தீப் யாதவ் அல்லது யுஸ்வேந்திர சாஹல், முகமது ஷமி, முகமது சிராஜ், உம்ரான் மாலிக்.

நியூசிலாந்து: பின் ஆலென், டிவான் கான்வே, மார்க் சாப்மேன் அல்லது ஹென்றி நிகோல்ஸ், டேரில் மிட்செல், டாம் லாதம் (கேப்டன்), கிளென் பிலிப்ஸ், மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சான்ட்னெர், ஹென்றி ஷிப்லி அல்லது டக் பிரேஸ்வெல், ஜேக்கப் டப்பி அல்லது பிளேர் டிக்னெர், லோக்கி பெர்குசன்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/4GDeOLy
via

No comments