Breaking News

2024-ல் இந்தியாவுக்கே விடியல் ஏற்படும் - தயாராக இருக்கும்படி திமுகவினருக்கு ஸ்டாலின் அழைப்பு

சென்னை: கடந்த 2021-ல் தமிழகத்துக்கு விடியல் ஏற்பட்டதுபோல, 2024-ல் இந்தியாவுக்கே விடியலை ஏற்படுத்தும் நிலை வரப்போகிறது. அதற்கு நீங்கள் தயாராக இருங்கள் என்று திமுகவினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

சென்னையில் நேற்று நடைபெற்ற ஒரு திருமண விழாவில் முதல்வர் பேசியதாவது: அண்ணா மறைவுக்குப் பிறகு 1969-ல் முதல்வராக கருணாநிதி பதவியேற்றது பிப்.10-ம் தேதிதான். அதே தேதியில்தான் இந்த திருமணம் நடைபெறுகிறது. திருமண விழாவில் அமைச்சர்கள், தலைமை நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள் கலந்துகொள்வதாக போடப்பட்டுள்ளது. ஆனால், பெரும்பாலோர் வரவில்லை. காரணம், ஈரோட்டில் நடக்கும் தேர்தல்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/LuG7H1I
via

No comments