டேபிள் டென்னிஸில் மகாராஷ்டிரா சாம்பியன்
சென்னை: மாநிலங்களுக்கு இடையிலான 84-வது இளையோர் மற்றும் ஜூனியர் தேசிய சாம்பியன்ஷிப் டேபிள் டென்னிஸ் போட்டி சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெற்று வருகிறது. இதன் 3-வது நாளான நேற்று யு-19 மகளிர் அணிகள் பிரிவு இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் மகாராஷ்டிரா 3-1 என்ற கணக்கில் ஹரியாணாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துக்கொண்டது. அந்த அணி சார்பில் முதல் ஆட்டத்தில் மகாராஷ்டிராவின் ஜெனிபர் வர்க்கீஸ் 9-11, 2-11, 6-11 என்ற கணக்கில் ஹரியாணாவின் சுகானா சைனியிடம் தோல்வியடைந்தார்.
அடுத்த இரு ஆட்டங்களிலும் மகாராஷ்டிராவின் தனீஷா கோடேச்சா 11-7, 11-6, 14-12 என்ற கணக்கில் பிரித்தோகி சக்ரவர்த்தியையும், சாயாலி வாணி 11-6, 11-3, 11-7 என்ற கணக்கில் காவ்யா யாதவையும் தோற்கடித்து 2-1 என முன்னிலை பெற்றுக்கொடுத்தனர். 4-வது ஆட்டத்தில் தனீஷா கோடேச்சா 7-11, 11-7, 11-9, 11-13, 11-4 என்ற கணக்கில் சுகானா சைனியை வீழ்த்தி மகாராஷ்டிரா தங்கப் பதக்கம் வென்றது. ஹரியாணா வெள்ளிப் பதக்கம் பெற்றது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/L79RQPJ
No comments