Breaking News

ஸ்ரீவில்லிபுத்தூர் | சிறுவனின் மருத்துவச் செலவுக்காக ரூ.5 ஆயிரம் அளித்த ஆட்டோ ஓட்டுநரின் குழந்தைகள்

ஸ்ரீவில்லிபுத்தூர்: ராமநாதபுரம் மாவட்டம் பெருநாழியை சேர்ந்தவர் ரஞ்சித்சிங். இவரது மனைவி சரண்யா. இவர்களது மகன் கஜன்(4). கஜனுக்கு இருதய பிரச்சினை இருந்ததால் ரூ.4 லட்சம் செலவில் அறுவை சிகிச்சை செய்தனர். இந்நிலையில் இரண்டாவது அறுவை சிகிச்சைக்கு ரூ.7 லட்சம் செலவாகும் என்பதால் பணம் இல்லாததால் அறுவை சிகிச்சை செய்ய இயலவில்லை.

இதுகுறித்து சிறுவன் கஜன் முதல்வரிடம் உதவி கேட்டு பேசிய வீடியோ செய்திகளில் வெளியானது. இந்த வீடியோவை கண்ட ஸ்ரீவில்லிபுத்தூர் சந்தைபேட்டை தெருவை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் பிரின்ஸின் இரு குழந்தைகளும் சிறுவன் கஜனுக்கு உதவ வேண்டும் என தனது பெற்றோரிடம் தெரிவித்தனர். இதையெடுத்து உண்டியலில் சேமித்து வைத்த பணம் ரூ.5 ஆயிரத்தை கஜனின் தந்தை ரஞ்சித்சிங்கின் வங்கி கணக்கில் செலுத்தினர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/mn5yGVA
via

No comments