Breaking News

`டெல்டாவில் நிலக்கரி சுரங்கம்; சட்டசபை தீர்மானத்தால் எந்த பயனும் இல்லை!’ - சொல்கிறார் ஹெச்.ராஜா

சிவகங்கையில் நடந்த பாஜக-வின் ஸ்தாபக விழாவில் கலந்துகொண்ட ஹெச்.ராஜா செய்தியாளர்களிடம் பேசும்போது, "எதிர்க்கட்சிகள் சமீபத்தில் சமூக நீதி மாநாடு ஒன்றை நடத்தியுள்ளன. உண்மையில் சமூக நீதியை பா.ஜ.க-தான் நிறைவேற்றி வருகிறது. சிறுபான்மையினத்தை சேர்ந்த அப்துல் கலாம், பட்டியலினத்தை சேர்ந்த ராம்நாத் கோவிந்த், மலைவாழ் இனத்தை சார்ந்த முர்மு ஆகியோரை ஜனாதிபதி ஆக்கியது பாஜக தான்.

ஹெச்.ராஜா

பிற்பட்டோர் சமுதாய கமிஷனுக்கு காங்கிரஸ் அரசு அங்கீகாரம் அளிக்கவில்லை. பா.ஜ.க அரசுதான் அளித்தது. உலகம் முழுவதும் அம்பேத்கருக்கு நினைவிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் எதிர்க்கட்சிகள் சமூக நீதி கட்டமைப்பு உருவாக்கியிருப்பது எனக்கு மூன்றாம் பிறை ஸ்ரீதேவியை நினைவுபடுத்துகிறது.

கீழடி அருங்காட்சியகத்தில் பொதுமக்களை வெளியில் நிறுத்தி விட்டு, நடிகர் சூர்யா குடும்பத்தினர் கேக் வெட்டிக் கொண்டாடியது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்திலிருந்து நல்ல எண்ணிக்கையில் மோடியை ஆதரிப்பவர்கள் செல்வார்கள் என்ற நம்பிக்கை ஏற்படுத்தும் வகயில் தமிழகத்தில் பா.ஜ.க திகழ்கிறது.

நிலக்கரி சுரங்கம்

காவரி டெல்டா பகுதியில் நிலக்கரி சுரங்கம் அமைப்பது குறித்து சட்டசபையில் இயற்றப்பட்ட தீர்மானத்தால் எந்த பயனும் இல்லை. பா.ஜ.க அனைத்தையும் பார்த்துக் கொள்ளும். ஸ்டாலின் என்ன குட்டிக்கரணம் போட்டாலும், மத்திய அரசு அதனை செய்யும்.

தமிழக அமைச்சர்கள் மீது வரும் 14-ஆம் தேதி அண்ணாமலை ஊழல் பட்டியலை வெளியிடுவார். அதன் பிறகு தமிழக அரசியலில் பெரும் மாற்றம் நிகழும்.

அண்ணாமலை

சிவகங்கை தொகுதியின் எம்.பி யாரென முழுநேர அரசில்வாதியான எனக்கே தெரியவில்லை. மக்கள் மனநிலையும் அப்படித்தான் உள்ளது. இதைவிட அந்த எம்.பி-கே தன் தொகுதி மறந்துவிட்டது.

தமிழகத்தில் இருக்கும் ஷிண்டேக்களால் இந்த ஆட்சியின் காலம் எவ்வளவு நாள் என்பதை பார்ப்போம். நாடாளுமன்றத் தேர்தலுடன், சட்டமன்றத் தேர்தலையும் நடத்த அரசியல் சாசனத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும்." என பேசினார்.



from India News https://ift.tt/gdiHFK6

No comments